தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரயிலில் முன்பதிவு பெட்டி ஆக்கிரமிப்பு: சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் தவிப்பு

ரயிலில் முன்பதிவு பெட்டி ஆக்கிரமிப்பு: சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் தவிப்பு

ரயிலில் முன்பதிவு பெட்டி ஆக்கிரமிப்பு: சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் தவிப்பு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: குன்னுார், கேத்தியில் நடந்த சாரண, சாரணியர் இயக்க முகாமில் சென்னை ஐ.சி.எப். ஊழியர்களின் குழந்தைகள் 200 பேர் பங்கேற்றனர்.

நான்கு நாள் முகாம் முடிந்து நேற்று மதியம் 3:15க்கு கோவையில் இருந்து சென்னைக்கு கோவை எக்ஸ்பிரஸ் ரயிலில்(12676) பயணிக்க திட்டமிட்டிருந்தனர். இரண்டாம் வகுப்பு பெட்டியை முன்பதிவு செய்திருந்தனர்.

கோவை ரயில்வே ஸ்டேஷன் வந்து பார்த்த போது, முன்பதிவு செய்யாத பயணிகள் அப்பெட்டியில் ஆக்கிரமித்திருந்தனர்.

‘முகாம் முடிந்து இன்று(நேற்று) காலை இரு பஸ்களில் கேத்தியில் இருந்து புறப்பட்டோம். கல்லாறு அருகே ஒரு பஸ் டயர் பஞ்சரானது. சரிசெய்ய ஒரு மணி நேரமானது.

அதன்பின் மேட்டுப்பாளையம் ஸ்டேஷன் வந்தால் கோவை ரயில் புறப்பட்டுவிட்டது. மீண்டும் பஸ்சில் மதியம் 2:45 மணிக்கு கோவை வந்தோம். எங்களது பெட்டியில் முன்பதிவில்லா பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் வந்து அவர்களை வெளியேற்றுவதற்குள் நேரம் ஆகிவிட்டது. ரயிலும் சரியாக 3:15க்கு புறப்பட்டுவிட்டது.

இரண்டரை மணி நேரத்துக்கு பின்னர் மாலை 6:00க்கு வேறு ரயிலில் புறப்பட அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்’ என, மாணவர்களின் பெற்றோர் புலம்பித் தீர்த்தனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. எங்களிடம் முன்கூட்டியே தகவல் கொடுத்திருந்தால் ரயில் பெட்டியில் முன்பதிவு குறித்த நோட்டீஸ் ஒட்டி கண்காணித்திருப்போம்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us