/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் கட்டுமான பணிகள் பாதிப்பு
/
போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் கட்டுமான பணிகள் பாதிப்பு
போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் கட்டுமான பணிகள் பாதிப்பு
போர்வெல் லாரிகள் ஸ்டிரைக் கட்டுமான பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 12, 2026 05:02 AM
கோவில்பாளையம்: -: போர்வெல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், கட்டுமான பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில், 130 போர்வெல் லாரிகள் இயங்கி வருகின்றன.
போர்வெல் போட தேவையான, பிட் மற்றும் உதிரி பாகங்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால் போர்வெல் லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக போர்வெல் அமைக்க தேவையான முக்கிய பொருளான பிட் 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
எனவே, ஜன., 12ம் தேதி வரை, ஏழு நாட்கள் வேலை நிறுத்தம் செய்வதாக போர்வெல் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது. ஆறாவது நாளாக நேற்றும் போர்வெல் லாரிகள் இயங்கவில்லை.
இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாய தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலை ஆகியவற்றில் போர்வெல் அமைக்கும் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.

