/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி.ஆர்.,கே பள்ளியில் இனி இருபாலரும் படிக்கலாம்
/
பி.எஸ்.ஜி.ஆர்.,கே பள்ளியில் இனி இருபாலரும் படிக்கலாம்
பி.எஸ்.ஜி.ஆர்.,கே பள்ளியில் இனி இருபாலரும் படிக்கலாம்
பி.எஸ்.ஜி.ஆர்.,கே பள்ளியில் இனி இருபாலரும் படிக்கலாம்
ADDED : மார் 01, 2024 09:12 PM
அவிநாசி ரோட்டில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர்., கே பள்ளியில், இருபாலருக்குமான அட்மிஷன் துவங்கப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர் ரோஸ்லின்ஜெயா கூறியதாவது:
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி, 1966ல் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் இரு பாலர் படித்தனர். பின், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியாக செயல்பட்டது. வரும் கல்வியாண்டு முதல், இருபாலர் பள்ளியாக செயல்படவுள்ளது.
ப்ரி.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை அட்மிஷன் துவங்கப்பட்டுள்ளது. மெட்ரிக்., பள்ளியாக இருந்தாலும், சி.பி.எஸ்.இ., தரத்தில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் மேற்கொள்கிறோம். அடல் ஆய்வகம் இருப்பதால், மாணவர்கள் விரிவான செய்முறை திறன்களை பெறலாம். விபரங்களுக்கு, 90439 74774.
இவ்வாறு அவர் கூறினார்.