/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
/
மயங்கி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
ADDED : ஜன 13, 2025 12:15 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் 5 வயது சிறுவன். சிறுவனுக்கு சுவாச பிரச்சனை உள்ளது.
சுவாச குழாயில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அதன் பின் சிறுவன் வீட்டிற்கு வந்தும், தொடர் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே நேற்று முன் தினம் இரவு, சிறுவன் வீட்டில் இருந்த போது, மயங்கி விட்டார். அவரது பெற்றோர் உடனடியாக சிறுவனை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.------