/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெங்கு விழிப்புணர்வு பேரணி: என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
/
டெங்கு விழிப்புணர்வு பேரணி: என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
டெங்கு விழிப்புணர்வு பேரணி: என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
டெங்கு விழிப்புணர்வு பேரணி: என்.சி.சி., மாணவியர் பங்கேற்பு
ADDED : ஜன 14, 2024 11:32 PM
சூலுார்:கொள்ளுபாளையத்தில் நடந்த டெங்கு விழிப்புணர்வு பேரணியில், என்.சி.சி., மாணவியர் பங்கேற்றனர்.
என்.சி.சி., 5 தமிழ்நாடு பெண்கள் பிரிவு மற்றும் கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், கொள்ளுபாளையத்தில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களின் ஒத்துழைப்போடு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டால், டெங்கு பரவல் கட்டுப்படுத்தப்படும் என, பேரணியில் வலியுறுத்தப்பட்டது. முக்கிய தெருக்கள் வழியாக பேரணி சென்றது. விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர். வீடு, வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
கல்லுாரி முதல்வர் ராமசாமி, 5 தமிழ்நாடு மாணவியர் படையின் லெப்டினன்ட் கர்னல் ஜோஷி, கல்லுாரி என்.சி.சி., அணியின் லெப்டினன்ட் பிரியா, அரசூர் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ், சுகாதார மேற்பார்வையாளர் பழனிசாமி, ஆய்வாளர்கள் கணேசன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.