/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு
/
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு
ADDED : ஜூலை 01, 2025 10:26 PM

அன்னுார்;அத்திக்கடவு - அவிநாசி திட்ட பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணானது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், அன்னுார் அருகே குன்னத்துாராம்பாளையத்தில் உள்ள ஆறாவது நீரேற்று நிலையத்திலிருந்து, அன்னுார், காரமடை, எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் நிரப்பப்படுகிறது. நேற்று அதிகாலையில், அன்னுார் -- மேட்டுப்பாளையம் சாலையில், அல்லிக்காரம் பாளையம் பிரிவில், குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
அந்த பாதையில் மிக கனரக வாகனம் சென்றதால் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீரூற்று போல், தண்ணீர் சாலையில் பொங்கி, அல்லிக்காரம்பாளையம் ரோட்டில் சென்றது.
பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணானது. தகவல் அறிந்து அத்திக்கடவு திட்ட ஊழியர்கள் உடைப்பு ஏற்பட்ட இடத்துக்கு வந்தனர்; தண்ணீர் விநியோகத்தை நிறுத்தினர்.
இதையடுத்து பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி, தோண்டி, உடைப்பை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.