/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
/
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி திருட்டு
ADDED : அக் 09, 2024 10:49 PM
கோவை: சிங்காநல்லுார் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து, 10 சவரன் தங்கம், வெள்ளி, பணம் திருடி சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
சிங்காநல்லுார், எஸ்.ஐ. எச்.எஸ்., காலனி, காவேரி நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம், 64. இவர் கடந்த, செப்.,23ம் தேதி, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார்.
யாருமில்லாத இவரது வீட்டில் இருந்த 10 சவரன் தங்க நகைகள், 210 கிராம் வெள்ளி, ரூ. 20 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
தகவல் அறிந்து வந்த சோமசுந்தரம், சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கைரேகை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.