/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்பக புற்றுநோய் சந்தேகங்கள் நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்
/
மார்பக புற்றுநோய் சந்தேகங்கள் நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்
மார்பக புற்றுநோய் சந்தேகங்கள் நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்
மார்பக புற்றுநோய் சந்தேகங்கள் நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம்
ADDED : அக் 04, 2025 11:32 PM
கோவை: தவறான உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்களால் அதிகரித்து வரும் புற்றுநோய் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.) சார்பில், 'நலம் பேசுவோம்-நலமுடன் வாழ்வோம்' என்ற இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு, மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மார்பக புற்றுநோய் குறித்த தெளிவான விளக்கம் அளிக்கும் இந்நிகழ்ச்சி, வரும் 8ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கவும், வந்தபின் செய்ய வேண்டியவை குறித்தும், கே.எம்.சி.ஹெச். புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எழிற்செல்வன், மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபா ரங்கநாதன், புற்றுநோய் மருந்தியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம் அபினவ் ஆகியோர், விளக்கம் அளிக்க உள்ளனர்.
வரும், 8ம் தேதி காலை 11.30 மணிக்கு இணைய வழியில் (www.dmrnxt.in/nalam) நிகழ்வுகள் துவங்கும்.
மார்பக புற்றுநோய் குறித்த சந்தேகங்கள், சிகிச்சை முறைகள் குறித்து கேள்விகள் இருப்பின், 87549 87509 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். இதே எண்ணில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.