தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மார்பக புற்றுநோய் ஜேசிடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் ஜேசிடி விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் ஜேசிடி விழிப்புணர்வு நிகழ்ச்சி


UPDATED : நவ 05, 2026 11:47 PM

ADDED : நவ 04, 2026 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 11:47 PM ADDED : நவ 04, 2026 06:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ஜே.சி.டி. கல்வி நிறுவனங்களின் மகளிர் மேம்பாட்டு செல் சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'பிங்க் டே' நிகழ்ச்சி ஜே.சி.டி.சி.இ.டி. கருத்தரங்கத்தில் நடந்தது.

ஜெம் மருத்துவமனையின் மார்பகப் பரிசோதனை, சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் டாக்டர் பிரேமா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்பகால கண்டறிதல், தடுப்பு, சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். பெண்கள் சுயபரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், உடல்நலனில் அக்கறை செலுத்துதல், உரிய நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெறுதல் குறித்தும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சிக்கு ஜே.சி.டி., கல்வி நிறுவனங்களின் முதல்வர் மனோகரன், அறங்காவலர் கவுதமன், செயலாளர் துர்கா சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us