/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்பக புற்றுநோய் சந்தேகமா நாளை ஆலோசனை நிகழ்ச்சி
/
மார்பக புற்றுநோய் சந்தேகமா நாளை ஆலோசனை நிகழ்ச்சி
ADDED : அக் 07, 2025 01:27 AM

கோவை;'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.ஹெச்.,) சார்பில் 'நலம் பேசுவோம், நலமுடன் வாழ்வோம்' எனும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அக்., மாதம் பிங்க் மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இம்மாதம் மார்பக புற்றுநோயின் ஆரம்பகால கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், தடுப்பு மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இதன் நோக்கம்.
'தினமலர்' நாளிதழ் மற்றும் கே.எம்.சி.ஹெச்., சார்பில், மார்பக புற்றுநோய் வரும் முன், வந்த பின் என்ன செய்யலாம் என்ற தலைப்பில், இணையதள கலந்துரையாடல் நிகழ்ச்சி, நாளை நடக்கிறது. மார்பக புற்றுநோய் குறித்த அனைத்து சந்தேகங்களையும், இணையதளம் வாயிலாக, நிபுணர்களிடம் கேட்டறியலாம்.
கே.எம்.சி.ஹெச்., புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எழிற்செல்வன், மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபா ரங்கநாதன், புற்றுநோய் மருந்தியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ராம் அபினவ் ஆகியோர், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பர்.
சந்தேகங்களை, 87549 87509 என்ற 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு இன்றைக்குள் அனுப்ப வேண்டும். கேள்விக்கான பதில்கள், நாளை காலை 11.30 மணிக்கு 'தினமலர்' சமூக வலைதளத்தில் காணொளி மூலம் வெளியாகும்.
இதற்காக வழங்கப்பட்டுள்ள, 'க்யூஆர்' கோடு அல்லது, www.dmrnxt.in/nalam என்ற இணையதளத்தையும் பார்வையிடலாம்.