/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் மார்பக பரிசோதனை
/
அரசு மருத்துவமனையில் மார்பக பரிசோதனை
ADDED : அக் 21, 2024 11:58 PM

கோவை : கோவை அரசு மருத்துவமனை நுண்கதிர் சிகிச்சை பிரிவு சார்பில், பெண்களுக்கு மார்பக பரிசோதனை முகாம் நேற்று துவங்கியது.
மருத்துவமனை டீன் டீன் நிர்மலா முகாமை துவக்கி வைத்து கூறுகையில், ''மார்பக புற்றுநோயை துவக்க நிலையில் கண்டறிந்தால், உயிரை காப்பாற்ற முடியும். அரசு மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாம் வரும், 26ம் தேதி வரை நடக்கிறது.
காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை முகாம் நடக்கும். மார்பகங்களில் வலி, கட்டி, அக்குள்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளில், ஏதாவது ஒன்று இருந்தாலோ, ரத்த சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது, மார்பக புற்று நோய் இருத்தாலோ உடனடியாக மார்பக பரிசோதனை செய்வது அவசியம். எந்த அறிகுறியும் இல்லையென்றாலும், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இப்பரிசோதனையை மேற்கொள்வது பாதுகாப்பானது,'' என்றார்.