/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பாலம் கட்டும் பணி இழுபறி; பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்
/
பாலம் கட்டும் பணி இழுபறி; பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்
பாலம் கட்டும் பணி இழுபறி; பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்
பாலம் கட்டும் பணி இழுபறி; பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்
PUBLISHED ON : அக் 14, 2025 12:00 AM

பாலம் பணி இழுபறி உடுமலை தங்கம்மாள் ஓடை அருகே பாலம் கட்டுமான பணி இழுபறியாக உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பணியை விரைந்து முடிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
இருக்கை தேவை உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில், போதிய அளவில் இருக்கைகள் இல்லாததால், பயணியர் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே, கூடுதலாக இருக்கைகளை அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகம், உடுமலை.
மையத்தடுப்பில் போஸ்டர் உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே பொள்ளாச்சி ரோட்டில் மையத்தடுப்பில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோரின் கவனம் சிதறடிக்கப்படுகிறது. எனவே, இதில் போஸ்டர் ஒட்டுவோர் மீது நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன், உடுமலை.
வாகனங்களால் இடையூறு உடுமலை பிரதான ரோடுகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே விதிமீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கார்த்திக், உடுமலை.
ஓடுதளம் சேதம் தளி ரோடு மேம்பாலம் சுரங்கப்பாதை ஓடுதளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சுரங்கப்பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுரேஷ், உடுமலை.
தெருநாய் தொல்லை பொள்ளாச்சி, ஜோதி நகரில் ரோட்டில் அதிகளவு தெருநாய்கள் சுற்றுகின்றன. இவைகளால் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சம் ஏற்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகத்தினர், தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
- டேனியல், பொள்ளாச்சி.
மக்கள் பாதிப்பு உடுமலை தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால், அங்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, தாலுகா அலுவலகத்தில் குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.
சேதமடைந்த ரோடு கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் இருந்து கோதவாடி செல்லும் ரோட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்ட குழி தற்போது பெரிதாகி உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். ரோடு மேலும் சேதமடையும் முன், அதிகாரிகள் ரோட்டை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விக்ரம், கிணத்துக்கடவு.
வீணாகும் போர்வெல் கிணத்துக்கடவு, தேரோடும் வீதியில் ரேஷன் கடை அருகே உள்ள போர்வெல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகத்தினர் ஆய்வு செய்து, மக்கள் பயன்படுத்தும் வகையில் சரி செய்து தர வேண்டும்.
-- ராஜ்குமார், கிணத்துக்கடவு.
பாதாள சாக்கடை சேதம் பொள்ளாச்சி, ஊத்துக்காடு ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி சேதமடைந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- பெருமாள், பொள்ளாச்சி.
ஓடுதளத்தில் பாதிப்பு பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் இரண்டு ஓடுதளத்திலும் உள்ள, இரும்பு சட்டங்கள் பெயர்ந்துள்ளன. வாகனங்கள் செல்லும் போது, இரும்பு சட்டம் அடித்து அதிர்வு ஏற்படுகிறது. இதனை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- கிருஷ்ணன், பொள்ளாச்சி.
கான்கிரீட் பூச்சு சேதம் கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் பொது சேவை கட்டடத்தின் மேற்கூரையில் ஆங்காங்கே கான்கிரீட் பூச்சு சேதமடைந்து காணப்படுகிறது. கட்டடத்தின் உருக்குலைந்த பகுதி பெயர்ந்து விழுவதற்கு முன், ஊராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும்.
-- ரகு, கிணத்துக்கடவு.