/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடைந்து கிடக்கிறது கான்கிரீட் வடிகால் சிலாப் செம்மொழி பூங்கா அருகே காத்திருக்கிறது ஆபத்து

UPDATED : ஜன 05, 2026 06:52 AM
ADDED : ஜன 05, 2026 05:41 AM

காந்திபுரம்: மாநில நெடுஞ்சாலைத்துறையால் காந்திபுரத்தில் மேம்பாலம் கட்டிய போது, நஞ்சப்பா ரோட்டில் கான்கிரீட் பாக்ஸ் வடிவில் மழை நீர் வடிகால் பதிக்கப்பட்டது. தற்போது மாநகராட்சியால் செம்மொழி பூங்கா உருவாக்கியபோது, 'கன்வென்ஷன் சென்டர்' வரை, புதிதாக மழை நீர் வடிகால் கட்டி, நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
செம்மொழி பூங்காவுக்கு காரில் வருவோர் வெளியேறுவதற்கு வெளிச்சுற்றில் தார் ரோடு போடப்பட்டிருக்கிறது. செம்மொழி பூங்காவில் இருந்து வெளியே வருவோர், அவிநாசி ரோட்டுக்குச் செல்ல, தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வழியாகச் செல்ல வேண்டும்.
காந்திபுரம் வழியாக செல்ல வேண்டியவர்கள், பூங்காவில் இருந்து இறங்கி நஞ்சப்பா ரோட்டில் இணையும் இடத்தில், மழை நீர் வடிகால் குறுக்கே செல்கிறது. அதன் சிலாப் தரமின்றி போடப்பட்டு இருப்பதால், வாகனங்கள் சென்றபோது, அழுத்தம் தாங்காமல் உடைந்து விட்டது. செம்மொழி பூங்காவுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால், உடைப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. விபத்து ஏற்படாமல் இருக்க, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் விதமாக குழிக்கு அருகே கற்கள் வைக்கப்பட்டுள்ளன. பாதசாரிகள், கால் இடறி விழாமல் இருக்க, போதிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சில ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால் சிலாப் உடைந்து விட்டது. மாநகராட்சி மூலமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது' என்றனர்.