தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிரதான ரோட்டில் உடைந்த குழாய்

பிரதான ரோட்டில் உடைந்த குழாய்

பிரதான ரோட்டில் உடைந்த குழாய்


UPDATED : நவ 29, 2026 06:50 PM

ADDED : நவ 29, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 06:50 PM ADDED : நவ 29, 2026 06:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை: நகரின் பிரதான ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதால் அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா பகுதியில், ராஜேந்திரா ரோடு, வெங்கடகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட ரோடுகள் பிரதான ரோட்டுடன் இணைகின்றன. அவ்விடத்தில், மையத்தடுப்பு வைக்கப்பட்டு, ஒரு பகுதியில் பாதசாரிகளுக்காக நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே வாகன மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும். அங்கு ரோட்டின் மையத்தில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. ரோடும் சேதடைந்து குழியாக மாறி விட்டது.

அப்பகுதியை கடக்கும் போது இருசக்கர வாகன ஓட்டுநர்கள் திணற வேண்டியுள்ளது. நடந்து செல்லும் மக்கள் மீது தண்ணீர் தெறிக்கிறது. இவ்வாறு, அனைத்து தரப்பினரும் பாதித்து வருகின்றனர். குழாய் உடைப்பை உடனடியாக நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us