/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தம்பி கொலை வழக்கில் அண்ணனுக்கு சிறை
/
தம்பி கொலை வழக்கில் அண்ணனுக்கு சிறை
ADDED : அக் 29, 2025 12:38 AM
கோவை: சிறுமுகை அருகேயுள்ள ஆலங்கொம்பு பகுதியை சேர்ந்தவர் சந்தானம்,62; டிரைவர். குடும்பத்தினருடன் சென்னையில் வசிக்கிறார்.
சிறுமுகை, இலுப்ப நத்தத்தில் தாயார் விஜயா வசித்து வருகிறார். வீட்டு வாடகை பணத்தை மாதந்தோறும் சந்தானம் கொடுத்து வந்தார். டெய்லராக இருக்கும் அவரது தம்பி பாண்டியன்,55, தாயாருடன் தங்கியிருந்தார்.
2022,ஏப்., 9ல், தாயாரை பாார்க்க சிறுமுகை சென்ற சந்தானம், 'வீட்டு வாடகையை நான் கொடுத்தும், தாயாரை சரியாக கவனித்துக் கொள்ளாமல் இருக்கிறாயே' என்று தம்பி பாண்டியனை திட்டினார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், பாண்டியனை கத்தரிக்கோலால் குத்தினார். பின்னர், அவரே பாண்டியனை மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார்.
சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார். சிறுமுகை போலீசார் விசாரித்து, சந்தானத்தை கைது செய்தனர். அவர் மீது, கோவை ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட சந்தானத்துக்கு ஏழாண்டு சிறை, 3,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

