/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.38 லட்சம் மோசடி: சகோதரர்கள் கைது
/
ரூ.38 லட்சம் மோசடி: சகோதரர்கள் கைது
ADDED : நவ 22, 2025 07:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கர்நாடக மாநிலம், பெகல்காம் பகுதியை சேர்ந்த தங்கராஜ்,47, இவரது சகோதரர் சண்முகசுந்தரம் ஆகியோர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று, ஆன்லைன் வாயிலாக விளம்பரப் படுத்தினர்.
நவாவூர் பிரிவை சேர்ந்த 64 வயதுடைய பெண், விளம்பரத்தை பார்த்து இருவரிடம் பேசியுள்ளார். அவர்கள் தெரிவித்தபடி, 38.62 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார்.
ஆனால், இருவரும் சேர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்வதாக கூறி, ஏமாற்றியது தெரியவந்தது.
புகாரின் பேரில், கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தங்கராஜ், சண்முகசுந்தரம் ஆகியோரை நேற்று கைது செய்து, கோவை சிறையில் அடைத்தனர்.

