தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்விக்கான பட்ஜெட்

கல்விக்கான பட்ஜெட்

கல்விக்கான பட்ஜெட்


UPDATED : ஆக 05, 2026 05:27 PM

ADDED : ஆக 05, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 05:27 PM ADDED : ஆக 05, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்விக்கான பட்ஜெட் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் வாட்டர்பாட்டில் வசதியுடன் சைக்கிள், வழங்குவது வரவேற்கத்தக்கது. மற்ற திட்டங்களை காட்டிலும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அதிக நிதி ஒதுக்கியிருப்பது நல்ல விஷயம். ஏ.ஐ., சார்ந்த பாடத்திட்டம் வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று அறிவிப்பு புதிய முயற்சியாக இருக்கிறது. இதனால், வரும் காலங்களில் தமிழகத்தில் ஏ.ஐ., சார்ந்து பல தொழில்கள் வர வாய்ப்புள்ளது. மொத்தத்தில் கல்விக்கான பட்ஜெட்டாக இதை நான் பார்க்கிறேன். -மணிகண்ட பிரபு, தனியார் நிறுவன பணியாளர், கிணத்துக்கடவு

அறிவிப்புகள் இல்லை தமிழர் பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டிகளுக்கு நிதி ஒதுக்கீடு, மாணவியர் பள்ளி இடைநின்றலை தவிர்க்க ஊக்கத்தொகை வழங்கல், பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகமாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு திட்ட வீடுகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் என, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கியது வரவேற்கும் விதமாக உள்ளது. ஆனால் த.வெ.க., அறிவித்த, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம், மாதம் ரூ.2,500 வீதம் மகளிர் உரிமைத்தொகை அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. அருண் பிரசாத், தனியார் நிறுவன பணியாளர், பொள்ளாச்சி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us