/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க! தொழிலாளர்கள் வலியுறுத்தல்
/
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க! தொழிலாளர்கள் வலியுறுத்தல்
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க! தொழிலாளர்கள் வலியுறுத்தல்
தொகுப்பு வீடு கட்டிக்கொடுங்க! தொழிலாளர்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 09, 2024 10:47 PM
வால்பாறை; ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:
வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில், வனவிலங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளின் அச்சுறுத்தலால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமலும், நிரந்தரமாக வசிக்க முடியாமலும் தவிக்கிறோம்.
எனவே, நகரை சுற்றிலும் தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை மீட்டு, அந்த இடத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக குடியிருக்க, சொந்த வீடு கூட இல்லாத நிலையில் கூலி வேலை செய்து பிழைக்கும் தொழிலாளர்களின் நலன் கருதி, நகரில் தொகுப்பு வீடுகள் கட்டித்தர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

