‘சவால்களில் இருந்து மீளும் மன உறுதியை வளர்க்கணும்’
‘சவால்களில் இருந்து மீளும் மன உறுதியை வளர்க்கணும்’
ADDED : ஆக 17, 2026 08:02 PM
கோவை: பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் முதலாமாண்டு பி.இ., பி.டெக்., மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி, கல்லுாரியின் நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது. சென்னை துறைமுக ஆணைய தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியும், கல்லுாரியின் முன்னாள் மாணவியுமான அனுக்ரஹா பங்கேற்றார்.
விழாவில் அவர் பேசுகையில், ‘‘ மாணவர்கள் நிச்சயமற்ற சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவத்தையும், சவால்களில் இருந்து மீண்டெழும் மன உறுதியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மன நலம், நிதி மேலாண்மை ஆகியவற்றிலும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும், ’’ என்றார்.
கல்லுாரியின் சிறப்பு மையங்கள், விஷன் லேப்கள், ஆராய்ச்சி மையங்கள், தொழில் நிறுவன கூட்டாண்மைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், ஹேக்கத்தான், விளையாட்டு, மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட இணை செயல்பாடுகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என, கல்லுாரி முதல்வர் திலகவதி அறிவுறுத்தினார்.
