/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பைக்கு தீ வைப்பதால் பாதிக்குது உடல் நலம்; நடவடிக்கை எடுத்தால் சுகாதாரத்துக்கு பலம்
/
குப்பைக்கு தீ வைப்பதால் பாதிக்குது உடல் நலம்; நடவடிக்கை எடுத்தால் சுகாதாரத்துக்கு பலம்
குப்பைக்கு தீ வைப்பதால் பாதிக்குது உடல் நலம்; நடவடிக்கை எடுத்தால் சுகாதாரத்துக்கு பலம்
குப்பைக்கு தீ வைப்பதால் பாதிக்குது உடல் நலம்; நடவடிக்கை எடுத்தால் சுகாதாரத்துக்கு பலம்
ADDED : டிச 16, 2024 12:10 AM

விளையாட சிரமம்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 33வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.கே.ஆர்., நகரில், பூங்காவில் புதர் செடிகள் ஆக்கிரமித்துள்ளதால், நடைபயிற்சி செல்பவர்கள், சிறுவர், சிறுமியர் விளையாட சிரமப்படுகின்றனர். புதர் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- முருகேசன், கவுண்டம்பாளையம்.
கழிவுநீர் தேக்கம்
கோவை மாநகராட்சி வார்டு எண் 27ல், பீளமேடு துரைசாமி லே- அவுட்டில் தென்புறம் உள்ள கழிவு நீர் கால்வாய் கட்டி, 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதை சுத்தப்படுத்தியோ அல்லது கழிவுநீர் கால்வாயை புதிதாக கட்டித்தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சரஸ்வதி, துரைசாமி லே-அவுட்.
நோய் பரவும் அபாயம்
காந்திமாநகர் போலீஸ் ஸ்டேஷன் முன்புறம், வார்டு எண் 25ல், குப்பை கழிவு கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- பாஸ்கரன், காந்திமாநகர்.
சிக்னல்களில் சிக்கல்
கணபதி முதல் சரவணம்பட்டி வரையுள்ள சத்தி பிரதான சாலையில், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், சரவணம்பட்டி துடியலுார் பிரிவு மற்றும் கீரணத்தம் ஐ.டி., பார்க் பிரிவு ஆகிய சிக்னல்களில், குறைந்தபட்சம் நான்கு போக்குவரத்து காவலர்களாவது நியமிக்க வேண்டும். -
- மோகன்ராஜ், கீரணத்தம்.
தெருவிளக்கு வசதியில்லை
மாநகரில், 45வது வார்டு, புது சுப்பம்மாள் நகர் 3வதுவீதி, லஷ்மி நகர் எக்ஸ்டன்ஷன் பகுதியில், சாலை வசதி மற்றும் தெருவிளக்கு வசதியில்லை. மழை காலங்களிலும், இரவு நேரங்களிலும் இப்பாதையில் பயணிக்க சிரமம் ஏற்படுகிறது. இப்பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நாகராஜன் கிருஷ்ணன், புது சுப்பம்மாள் நகர்.
குப்பைக்கு தீ
சுண்டக்காமுத்துார், ராம செட்டிபாளையம், ராதாராம் நகரில், குப்பை தீ வைத்து எரிக்கப்படுகிறது. இங்கு தேங்கும் குப்பையை சரிவர அகற்றுவதுமில்லை. தீ புகையால் சுவாச கோளாறு ஏற்படுகிறது. இங்கு குப்பை கொட்டுபவர்களுக்கு, அபராதம் விதிக்க வேண்டும். தினசரி குப்பை எடுக்க பணியாளர்கள் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- ஸ்ருதி, ராதாராம் நகர்.
போக்குவரத்துக்கு இடையூறு
மாநகராட்சி, 97வது வார்டு மதுக்கரை ரோடு எம்.ஜி.ஆர்., நகர், பிரதான சாலையின் முன், மழை காலங்களில் நீர் தேங்குவதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.
- -தங்கராஜ், எம்.ஜி.ஆர்.நகர்
விபத்து அச்சம்
திருச்சி பிரதான சாலை, ஒண்டிப்புதூர் பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாததால், மழைகாலங்களில் நீர் தேங்குகிறது. முறையான அனுமதியின்றி கட்டுமான கழிவுகள் பிரதான சாலையில் வீசப்படுகின்றன. அகற்றவும் தடுக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -சுதர்சன் ரவிச்சந்திரன், ஒண்டிப்புதுார்.
சொல்லியும் பயனில்லை
மாநகரில், 64வது வார்டு ராமநாதபுரம், கணேசபுரம், சுப்பையன் வீதியில் CZ- W-64 -SB-12-P-19 குறியீடுள்ள தெரு விளக்கு, பல மாதங்களாக எரிவதில்லை. இரவில் இப்பகுதியை கடப்பதற்கே அச்சமாக உள்ளது. தெருவிளக்கு பராமரிப்பு வாகனத்தில், நேரடியாக புகார் சொல்லியும் சரி செய்யவில்லை. -
-ராஜூ, ராமநாதபுரம்.