/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிழற்கூரை இல்லாததால் பஸ் பயணிகள் அவதி
/
நிழற்கூரை இல்லாததால் பஸ் பயணிகள் அவதி
ADDED : மே 08, 2025 12:35 AM
கருமத்தம்பட்டி; கோவை-அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி நால் ரோட்டில் மேம்பாலம் உள்ளது. கோவை நோக்கி செல்லும் பஸ்களும், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் சர்வீஸ் ரோடு வழியாக நால் ரோட்டுக்கு வந்து செல்கின்றன. அங்கு காத்திருக்கும் பயணிகள் பஸ்சில் ஏறி செல்வர்.
சர்வீஸ் ரோடுகளில் இரு புறமும் நிழல்கூரைகள் இல்லாததால், பயணிகள் வெயிலில் காய்ந்து மழையில் நனையும் நிலை உள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: கருமத்தம்பட்டி நால் ரோட்டில் நிழல்கூரை இல்லாததால், வெயில் மற்றும் மழையின் போது நிற்க இடமில்லாமல் அவதிப்பட வேண்டியுள்ளது. அருகில் உள்ள கடைகளில் போய் நிற்க வேண்டியுள்ளது.
முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் படாத படுகின்றனர். கத்திரி வெயிலில் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேம்பாலம் கட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை நால் ரோட்டில் நிழல்கூரை அமைக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

