தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அடிப்படை வசதி இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் பரிதவிப்பு

 அடிப்படை வசதி இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் பரிதவிப்பு

 அடிப்படை வசதி இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் பரிதவிப்பு


ADDED : பிப் 25, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதி இல்லாமல் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை நகரில் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வெளியூர் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே போல் காந்திசிலை, பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், வால்பாறை பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அக்காமலை, கருமலை,வெள்ளமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ் ஸ்டாண்டில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாததால், பயணியர் நாள் தோறும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பயணியர் கூறியதாவது:

வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன்பாக பழைய பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமர இருக்கை மற்றும் குடிநீர் வசதி இல்லை. குறிப்பாக, கழிப்பிட வசதி இல்லை. ஏற்கனவே நகராட்சி சார்பில் கட்டப்பட்ட கழிப்பிடம் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ளது.

இதனால், பள்ளி மாணவர்கள், பயணியர், வெளியூரிலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பயணியர் நலன் கருதி பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் செய்து தர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us