தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரி ஸ்டாப்பில் பஸ்கள் நிற்பதில்லை; மாணவிகள் புகார் மாணவிகள் புகார்

 கல்லுாரி ஸ்டாப்பில் பஸ்கள் நிற்பதில்லை; மாணவிகள் புகார் மாணவிகள் புகார்

 கல்லுாரி ஸ்டாப்பில் பஸ்கள் நிற்பதில்லை; மாணவிகள் புகார் மாணவிகள் புகார்


ADDED : செப் 12, 2026 04:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 04:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் குட்டையூர் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி மேட்டுப்பாளையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது.

இந்த கல்லூரிக்கு நேற்று மேட்டுப்பாளையம் த.வெ.க., எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் சென்று, பேராசிரியர்கள், மாணவர்களிடம் கலந்துரையாடி தேவைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம், மாணவிகள் தங்களது குறைகளை தயக்கமின்றி தெரிவித்தனர். அன்னூரில் இருந்து வரும் பஸ்கள், அன்னூர் ரோட்டில் உள்ள கல்லூரி ஸ்டாப்பில் நிற்பது இல்லை. மேலும் அங் கு பஸ் நிறுத்தாததால், மேட்டுப்பாளையம் அல்லது நால்ரோடு பகுதிகளில் இருந்து இறங்கி மீண்டும் 4 அல்லது 5 கி.மீ., மீட்டர் தூரம் நடந்து வருகிறோம். நேரம் ஆகிவிட்டால் ஆட்டோ வைத்து தான் கல்லூரிக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது எ ன புகார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த கல்லூரி ஸ்டாப்பில் பஸ்கள் நிற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என எம்.எல்.ஏ., உறுதி அளித்தார்.

பின் செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., சுனில் ஆனந்த் கூறுகையில், தனியார் கல்லூரிக்கு இணையாக அரசு கலைக்கல்லூரியை 100 சதவீதம் தரம் உயர்த்துவேன். துறை அமைச்சர், மாவட்ட அமைச்சர் என அனைவரையும் சந்தித்து இதற்கான ஏற்பாடுகளை செய்வேன், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us