/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி இயக்கணும்! புகார் மனு அளித்த மக்கள்
/
ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி இயக்கணும்! புகார் மனு அளித்த மக்கள்
ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி இயக்கணும்! புகார் மனு அளித்த மக்கள்
ஸ்டாப்பில் பஸ்களை நிறுத்தி இயக்கணும்! புகார் மனு அளித்த மக்கள்
ADDED : ஏப் 21, 2025 09:41 PM
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி - உடுமலை மார்க்கமாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கோமங்கலம்புதுார் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல அறிவுறுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பா.ஜ., பொள்ளாச்சி தெற்கு கிழக்கு ஒன்றியம் சார்பில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி - உடுமலை இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களை இணைக்கும் சாலையை கடக்கும் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், கோமங்கலம்புதுார் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இதனால், கோங்கலம்புதுார் பஸ் ஸ்டாப்பை தவிர்த்து, அரசு மற்றும் தனியார் பஸ்கள், மேம்பாலத்தின் வழியே இயக்கப்படுகிறது.
இப்பகுதியில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தார் வசித்து வருகின்றனர். பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரும் அரசு மற்றும் தனியார் பஸ்களை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில், சர்வீஸ் ரோடு மார்க்கமாக, கோமங்கலம்புதுார் பஸ் ஸ்டாப்பிற்கு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மேம்பாலம் வழியே இயக்கப்படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.
அதேபோல, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டிலேயே, கோமங்கலம்புதுார் செல்லும் பயணியர், பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுவதில்லை. 'கோமங்கலம்புதுாரில் பஸ் நிற்காது' என, கண்டக்டர்கள் கடிந்து கொள்கின்றனர். அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களை, கோமங்கலம்புதுார் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.