தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்களில் சத்தமாக போன்: தடை மீறுவோரால் அவதி 

பஸ்களில் சத்தமாக போன்: தடை மீறுவோரால் அவதி 

பஸ்களில் சத்தமாக போன்: தடை மீறுவோரால் அவதி 


UPDATED : செப் 06, 2026 09:30 PM

ADDED : செப் 06, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 09:30 PM ADDED : செப் 06, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: அரசு பஸ்களில் அதிக சத்தத்துடன் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்ற தடை உள்ளது. ஆனால், இந்த தடையை மீறும் பயணிகளால் சக பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

அதிக சத்தத்துடன் அரசு பஸ்களில் மொபைல் போன் பயன்படுத்த, ஜூலை 28ல் தமிழக போக்குவரத்துக் கழகம் தடை விதித்தது. இந்தத் தடையை பயணிகள் பலர் மீறி வருகின்றனர். நோயாளிகள், துாக்கத்தில் இருப்பவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், படபடப்பு உள்ளவர்கள் என பலரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கண்டக்டர்கள் பலமுறை எச்சரித்தும் பயனில்லை. 'அப்படியா, இந்த தடை பற்றி தெரியாதே' என கூறுவதாக கண்டக்டர் ஒருவர் தெரிவித்தார்.

மொபைல் போனை அதிக சத்தத்துடன் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து, அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்றும், விதியை மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us