sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 புதர் சூழ்ந்த இணைப்பு சாலை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

/

 புதர் சூழ்ந்த இணைப்பு சாலை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

 புதர் சூழ்ந்த இணைப்பு சாலை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு

 புதர் சூழ்ந்த இணைப்பு சாலை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு


ADDED : பிப் 17, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இணைப்பு சாலையில் புதர் உடுமலை அருகே குடிமங்கலம் ஊராட்சி கொங்கல்நகரம்- லிங்கமாவூர் இணைப்பு சாலையில் முள் புதர் மண்டிக்கிடக்கின்றன. இதனால், இந்த வழியாக செல்லும் அரசு பஸ்கள், மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து கொங்கல்நகரம் ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முருகன்: மின்கம்பத்தில் விளம்பர போர்டு உடுமலை தாராபுரம் ரோட்டில், மின்கம்பங்களில் விளம்பர போர்டுகள் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. இதனால், விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது. மின்கம்பங்களில் விளம்பர போர்டுகள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சண்முகம்: வேகத்தடை வேண்டும் உடுமலை -- தாராபுரம் ரோட்டில், புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை பாலத்திற்கு கீழ் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வம்: ரவுண்டானா வேண்டும் உடுமலை அருகே ஜல்லிபட்டி நால் ரோடு பகுதியில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கார்த்திக்: குடிநீர் பிரச்னை உடுமலை பஸ் ஸ்டாண்டில் போதிய குடிநீர் வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால், அங்கு வரும் பயணியர், பொதுமக்கள் குடிநீருக்கு சிரமப்பட வேண்டியதுள்ளது. எனவே, குடிநீர் வசதிகள் செய்து தர நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜா: நிழற்கூரை சேதம் உடுமலை போடிபட்டி ஊராட்சியில் உள்ள அண்ணாகுடியிருப்பு பஸ் ஸ்டாப் நிழற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இதை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, நிழற்கூரை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நாகராஜ்: பகலில் ஒளிரும் தெருவிளக்கு சூலக்கல்லில் இருந்து வடக்கி பாளையம் செல்லும் வழித்தடத்தில், தெருவிளக்கு பகல் நேரத்தில் எரிகிறது. இதனால், மின்சாரம் வீணாகிறது. இதை ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து பகலில் மின்விளக்கு எரியாமல் இருக்க 'டைமர்' பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- குரு: போக்குவரத்து பாதிப்பு கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே, கொண்டம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் அதிக அளவில் வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுவதால் கனரக வாகனம் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. இதனால், மற்ற வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதை போலீசார் கவனித்து வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதை ஒழுங்குபடுத்த வேண்டும்.

-- தங்கவேல்: ரோடு சேதம் பொள்ளாச்சி, வஞ்சியாபுரம் பிரிவில், ரோடு அதிகளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துடன் பயணம் செய்யும் நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி விரைவில் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-- டேனியல்: போக்குவரத்து நெரிசல் வால்பாறை நகரில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால், சுற்றுலா பயணியர் வாகனங்களில் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரோட்டை ஆக்கிரமித்து நிறுத்தும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- சரத்: ரோட்டில் கழிவுநீர் கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவு பகுதியில் சர்வீஸ் ரோட்டின் அருகே உள்ள கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதால், கால்வாயில் கழிவுநீர் நிரம்பி ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து சீரமைக்க வேண்டும்.

- ராஜன்:






      Dinamalar
      Follow us