/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சியா' சார்பில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கு
/
'சியா' சார்பில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கு
ADDED : மார் 17, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை, சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (சியா) சார்பில், தொழில் வளர்ச்சி மற்றும் ஆலோசனைக் கருத்தரங்கு, தலைவர் தேவகுமார் தலைமையில் நடந்தது.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பங்கேற்று, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வது, கோவைக்குத் தேவையான திட்டங்கள் குறித்து விவரித்தார். மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா, தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் துணை இயக்குநர் விஜய ராஜு, மாவட்ட தொழில் மைய இயக்குனர் சேதுராமன், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.