/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார சீர்கேடு விளைவித்ததாக வணிக வளாகத்துக்கு அபராதம்
/
சுகாதார சீர்கேடு விளைவித்ததாக வணிக வளாகத்துக்கு அபராதம்
சுகாதார சீர்கேடு விளைவித்ததாக வணிக வளாகத்துக்கு அபராதம்
சுகாதார சீர்கேடு விளைவித்ததாக வணிக வளாகத்துக்கு அபராதம்
ADDED : மார் 05, 2024 01:06 AM
கோவை;பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்ததாக, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்திற்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி, 24வது வார்டு, விளாங்குறிச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்தின் கழிவு நீர், முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல் பொது வெளியில் திறந்து விட்டு, சுகாதாரத்துக்கு கேடு விளைவித்து வருவதாக, அப்பகுதி மக்கள் மாநகராட்சியிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அடுக்குமாடி குடியிருப்புக்கு, ரூ.10 ஆயிரம் மற்றும் வணிக வளாகத்திற்கு ரூ.50 ஆயிரம் என, ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள், தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.