/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மைக்ரோ கிரீன்' வளர்க்கலாம் வாங்க
/
'மைக்ரோ கிரீன்' வளர்க்கலாம் வாங்க
ADDED : டிச 03, 2025 06:13 AM
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், காய்கறி அறிவியல் துறை சார்பில், வரும் 16ம் தேதி, 'மைக்ரோ கிரீன்' எனப்படும், தளிர் கீரைகள் வளர்ப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் குறித்து, ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
தளிர் கீரைகளும், தளிர் கீரை மதிப்புக் கூட்டிய பொருட்களும் ஊட்டச்சத்து நிறைந்தவையாகவும், உடல் நலத்தை மேம்படுத்துபவையாகவும் உள்ளன.
எனவே, தளிர் கீரைகள் சார்ந்து செயல்முறை சாகுபடித் திறன்கள், ஊட்டச்சத்து நன்மைகள், உணவுப் பாதுகாப்பு வழிமுறைகள், தர நிலைநிறுத்தம், நீடித்த வருவாய், மதிப்புக் கூட்டல், வணிகத்துக்கு வழிகாட்டல், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட தலைப்புகளில், பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சிக் கட்டணம், வரிகள் உட்பட ரூ.2,000. விவரங்களுக்கு, 89036 94612 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

