sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு; விண்ணப்பிக்க அழைப்பு

/

நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு; விண்ணப்பிக்க அழைப்பு

நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு; விண்ணப்பிக்க அழைப்பு

நுண்ணீர் பாசனம் அமைக்க நிதி ஒதுக்கீடு; விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : ஆக 28, 2025 05:42 AM

Google News

ADDED : ஆக 28, 2025 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிமங்கலம்; குடிமங்கலம் வட்டாரத்துக்குட்பட்ட ஆதிதிராவிடர் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க, அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது; திட்டத்தில் பயன்பெற தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

குடிமங்கலம் வட்டாரத்தில், 15,335 ெஹக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பிரதானமாக தென்னை, காய்கறி பயிர்களான தக்காளி, வெங்காயம், பீட்ரூட், கொத்தமல்லி மற்றும் பழப்பயிர்களான வாழை, மா போன்றவை சாகுபடியாகிறது.

'இச்சாகுபடிகளில், நுண்ணீர் பாசனத்தை பயன்படுத்தும் போது, பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்குவதால், குறைந்த நீரைக்கொண்டு அதிகப்பரப்பில் பயிர் செய்யலாம்,' என தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நுண்ணீர் பாசனம் அமைக்க, நடப்பாண்டு, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வகுமார் கூறியிருப்பதாவது: நுண்ணீர் பாசன முறையில், விவசாயிகளுக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கிறது. குடிமங்கலம் வட்டாரத்திற்கு, 2025--26 நிதியாண்டில் தோட்டக்கலைத் துறை வாயிலாக ஆதிதிராவிடர் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க, 140 ஹெக்டேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் சிறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும் பெரிய விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே நுண்ணீர் பாசனம் அமைத்து மானியம் பெற்று, 7 ஆண்டு முடிந்து இருந்தால் மீண்டும் மாற்றி அமைக்க மானியம் பெறலாம்.

சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, நில வரைபடம், கூட்டு வரைபடம், ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கிக்கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு, பெதப்பம்பட்டி உள்வட்டத்தை சோந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ராஜசேகரன் 86 755 56865; சங்கவி 81110 55320; குடிமங்கலம் உள்வட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சரவணகுமார் 97891 97648; மதன் 97867 78651 என்ற மொபைல்போன் எண்களிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us