/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு
/
தேசிய கல்வி உதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 21, 2025 11:06 PM
பொள்ளாச்சி; 'இளம் சாதனையாளர்களுக்கான தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கோவை கலெக்டர் பவன்குமார் அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான, பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
2025--26ம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருவாய், ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, national Scholorship Portal (https://scholorships.gov.in) இணைய தளத்தில் பார்வையிட்டு, கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.