/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
/
ஊர்காவல் படையில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 14, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகர ஊர்காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகர போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
காட்டூர் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் உள்ள, மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் வரும், 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத, 20 பூர்த்தியடைந்தவர்கள், 45 வயது நிரம்பாதவர்கள் விண்ணப்பிக்கலாம். வரும், 3 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, 94981 71363, 94981 72525 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

