தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பயிர் காப்பீடு செய்ய வந்தது அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய வந்தது அழைப்பு

பயிர் காப்பீடு செய்ய வந்தது அழைப்பு


UPDATED : நவ 17, 2026 07:39 PM

ADDED : நவ 17, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 07:39 PM ADDED : நவ 17, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை இடர்பாடுகள், பருவமழை பொய்த்தல் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள இத்திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.

மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வரும் 30 கடைசி நாள். சோளம் பயிருக்கு டிச. 16 கடைசி நாள்.

பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், கடன் பெறாதவர்கள், குத்தகைதாரர்கள் மற்றும் பகிர்வு முறையில் சாகுபடி செய்வோரும் காப்பீடு செய்யலாம்.

இதற்கு அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தக நகல், சிட்டா, அடங்கல் அல்லது பட்டா, குத்தகை ஒப்பந்தம், விதைப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.

pmfby.gov.in இணையதளம், இ – சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக பதிவு செய்யலாம்.

கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us