/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்கள் தொடர்பு முகாமில் மனு அளிக்க அழைப்பு
/
மக்கள் தொடர்பு முகாமில் மனு அளிக்க அழைப்பு
ADDED : மார் 21, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கரியாம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க வருவாய்த்துறை அழைப்பு விடுத்துள்ளது.
கரியாம்பாளையம் ஊராட்சியில், செல்வநாயகி அம்மன் திருமண மண்டபத்தில், வருகிற 26ம் தேதி காலை 10:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் தலைமையில் மனுக்கள் பெறப்படுகிறது. இதில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மாவட்ட மற்றும் வட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.