/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவருக்கும் அழைப்பு'
/
'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவருக்கும் அழைப்பு'
'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவருக்கும் அழைப்பு'
'தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவருக்கும் அழைப்பு'
ADDED : அக் 18, 2025 11:39 PM

கோவை: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை எதிர்ப்பவர்களும் தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களும், ஒரே கூட்டணிக்கு வருவார்கள் என்று, பா.ஜ., மாநில பொது செயலாளர் ராமசீனிவாசன் கூறினார்.
கோவை பா.ஜ.,அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் அக்.,31 அன்று கொண்டாடப்படுகிறது. அவரது 150வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட, பா.ஜ.,திட்டமிட்டுள்ளது.
வல்லபாய் பட்டேல் காங்.,கட்சியை சேர்ந்திருந்தாலும், காங்., அவருக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் பா.ஜ., தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழகத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் இல்லை என்ற நிலையை, உள்துறை அமித்ஷா கொண்டு வந்திருக்கிறார். தமிழகத்தில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் வந்துவிடக்கூடாது.
2026ல் தி.மு.க.,வை எதிர்ப்பவர்களும், தி.மு.க., ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களும், ஒரே கூட்டணிக்கு வருவார்கள். தி.மு.க.,வை ஆட்சியில் இருந்து அகற்ற அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் சூர்யா, மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.