ADDED : மே 19, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை வட்டாரத்தில் பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பதிவு பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறுகையில், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ் தகுதியுடைய விவசாயிகள் அனைவரும், காரமடை வட்டாரத்தில் நடைபெற்று வரும் சிறப்பு முகாம்கள் அல்லது இ-சேவை மையங்களை அணுகி தங்களுடைய நிலம் தொடர்பான விவரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது போன்ற அனைத்து விதமான பி.எம்.கிஷான் விவரங்களை பதிவு செய்து பயன்பெற வேண்டும், என்றார்.