/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள்
/
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள்
ADDED : நவ 27, 2025 02:25 AM
சூலூர்: சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்க, நொய்யல் ஆற்றங்கரையில், கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
சூலூர் அடுத்த ராவத்தூர் பிரிவில் உள்ள, இன்ஜினியரிங் தொழிற்சாலை வளாகத்துக்குள் கடந்த, 12ம் தேதி இரவில் சிறுத்தை உலா வந்தது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் அக்காட்சிகள் பதிவாகி இருந்தன. சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறையினர், நொய்யல் ஆற்றங்கரையில் ஆறு கேமராக்களை பொருத்தி, கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சூலூர், நீலம்பூர் பகுதிகளில் சிறுத்தை உலா வருவதாக தகவல் பரவியது. பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளை காணவில்லை என்றால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்' என்றனர்.

