/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர்களாக சேர ஓட்டுச்சாவடிகளில் முகாம்
/
வாக்காளர்களாக சேர ஓட்டுச்சாவடிகளில் முகாம்
ADDED : டிச 23, 2025 05:19 AM
சூலூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, சூலூர் தாலுகாவில், 385 ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முடிந்து, கடந்த, 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சூலூர் சட்டசபை தொகுதியில், 2 லட்சத்து, 93 ஆயிரத்து, 516 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றனர். 45 ஆயிரத்து, 311 பேர் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், புதிய வாக்காளர்கள் சேர்த்தல், வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக நீக்கப்பட்டவர்கள் ஆகியோரை, பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வரைவு வாக்காளர் பட்டியலை, தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம். ஆன்லைனிலும் பார்க்கலாம். விடுபட்ட வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் படிவம் 6 பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
அவை பரிசீலனை செய்யப்பட்டு, பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய வாக்காளர்களை சேர்க்கவும், விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும் சிறப்பு முகாம்கள், வரும், 27 மற்றும் 28ம் தேதிகளிலும், ஜன., 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சூலூர் தாலுகாவில், 385 ஓட்டு சாவடிகளில் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

