/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம்
ADDED : ஜன 03, 2026 06:50 AM
வால்பாறை: புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில், இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.
வால்பாறை சட்டசபை தொகுதியில் புதிய வாக்காளர்களை சேர்க்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இன்றும், நாளையும் நடைபெறும் முகாமில், 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில் மொத்தம் உள்ள, 69 ஓட்டுச்சாவடிகளில் இன்று 3ம் தேதியும், நாளை 4ம் தேதியும் சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கம், பெயர், முகவரி, மொபைல்போன் எண் உள்ளிட்டவை திருத்துவதற்கான படிவங்கள் பிரின்ட் செய்யப்பட்டு, போதுமான எண்ணிக்கையில் பி.எல்.ஓ.,களிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில், 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர்கள் மற்றும் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், உரிய விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். இந்த வாய்ப்பை வாக்காளர்கள் தவற விடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கூறினர்.

