ADDED : செப் 06, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
கோவை செப். 7 -: சின்னவேடம்பட்டி ஏரி மற்றும் நஞ்சேகவுண்டன்புதுார் சுடுகாடு ஆகியவற்றை பாதுகாக்க வலியுறுத்தியும், நீர்நிலை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தியும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று வாகன பிரசாரம் நடந்தது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய தலைவர் மனோஜ் தலைமையில் நடந்த பிரசார பயணத்தை மாவட்ட செயலாளர் ராஜா துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், ‘‘சின்னவேடம்பட்டி ஏரி, கோவை நகரை மழை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கிறது. வடக்கு பகுதியின் நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. இந்த ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை மாநகராட்சி கைவிட வேண்டும்,’’ என்றார்.
