/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைக்கு செல்லும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியுமா?
/
வேலைக்கு செல்லும் மனைவி ஜீவனாம்சம் கோர முடியுமா?
ADDED : அக் 18, 2025 11:37 PM

கணவர் குடும்ப உறவில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உள்ளதால், குடும்பத்தை கவனிப்பதில்லை. இந்த காரணத்திற்காக கணவரிடமிருந்து விவாகரத்து கேட்க முடியுமா?
விவாகரத்து கோர முடியும். மனைவியுடன் குடும்ப உறவில் ஆர்வம் இல்லாமல் கணவன் இருந்தால், அது மனைவியை கொடுமைபடுத்துவதற்கு இணையானது என்று கூறி, கேரள ஐகோர்ட் ஒரு வழக்கில் விவாகரத்து வழங்கி உள்ளது.
கணவனை பிரிந்த மனைவி வேலைக்கு செல்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கோர முடியுமா?
பிஎன்எஸ்எஸ் பிரிவு, 144ன் கீழ் மனைவி வேலைக்கு சென்றால், ஜீவனாம்சம் கோர முடியாது. இரண்டு குழந்தைகளுக்கு ஜீவனாம்சம் கேட்கலாம்.
- வக்கீல் சண்முகம்
ரேஸ்கோர்ஸ்.