/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவே முடியாதா? தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
/
கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவே முடியாதா? தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவே முடியாதா? தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
கழிவுநீர் வெளியேறுவதை தடுக்கவே முடியாதா? தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்
ADDED : நவ 05, 2024 09:03 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி ரோட்டில், பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி தேங்குவதால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டம் கடந்த, 2016ம் ஆண்டு, 109.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, 170 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக, சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆள் இறங்கும் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் முடிந்தும், வீடுகளுக்கான இணைப்புகள் முழுமை பெறாமல் உள்ளது. அதேநேரம், நகரில், ஆங்காங்கே அமைந்துள்ள ஆளிறங்கு குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறும் பிரச்னை தொடர்கதையாகி வருகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பணிக்கம்பட்டி ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறி ரோட்டில் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
ரோட்டில் நடந்து செல்வோர், முகம் சுளித்தபடியே கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

