சீருடை அணிந்து துள்ளி திரிந்த காலத்தை மறக்க முடியுமா !
சீருடை அணிந்து துள்ளி திரிந்த காலத்தை மறக்க முடியுமா !
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 05:34 PM
கோவை: பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 60 பேர் பள்ளி வளாகத்தில் நேற்று முதல் முறையாக சந்தித்தனர்.
இவர்கள் இந்த பள்ளியில், 1998ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்தவர்கள். அப்போது ஒருவருக்கு நட்புடன் கட்டித்தழுவி, அன்பை பரிமாறிக்கொண்டனர். தங்கள் ஆசிரியர்களை சந்தித்து மரியாதை செலுத்தினர்.
இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த ராமகிருஷ்ணன் கூறியதாவது:
என்னுடன் படித்த ஒரே ஒரு நண்பரை எதிர்பாராமல் ஒருநாள் சந்தித்தேன். அப்போது எங்களுடன் படித்த மற்றவர்களை பற்றி விசாரித்த போது, யார் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றார்.
இருவரும் ஒருநாள் பள்ளியில் இருந்து தகவல் சேகரித்து டெலிபோன் டைரெக்டரியில் இருந்து சிலரின் நம்பரை எடுத்து தொடர்பு கொண்டோம்.
அவர்களிடம் இருந்து பலரின் தொடர்பு கிடைத்தது. இப்படி, 60 பேரை தொடர்பு கொண்டு சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பதால் பலரை அடையாளம் தெரியவில்லை. சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர்.
ஆண்டுகள் பல கடந்திருக்கலாம், ஆனால் பள்ளிச் சுவர்களுக்குள் உருவான நட்பும், நினைவுகளும் மாறவில்லை. யூனிபார்ம் போட்டு மாணவர்களாக துள்ளித்திரிந்த காலத்தை மறக்க முடியுமா என்றார்.
