UPDATED : ஆக 17, 2026 07:15 PM
ADDED : ஆக 17, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் அருகே, 40 கஞ்சா சாக்லெட் உடன் பீகார் தொழிலாளி பிடிபட்டார்.
அன்னூரில் ஆன்லைன் வாயிலாக கஞ்சா சாக்லேட் வாங்கி பயன்படுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அன்னூர் போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், ராம் நகரில் தங்கி பணிபுரிந்து வரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி நவ்ஷத், 18, பிடிபட்டார்.
இவர் 'ஆப்' வாயிலாக கஞ்சா சாக்லெட் ஆர்டர் செய்து வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், நவ்சத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் எடையுள்ள 40 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
