/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்; மூவர் கைது
/
கஞ்சா, போதை மாத்திரை பறிமுதல்; மூவர் கைது
ADDED : ஜன 10, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: போத்தனூர் போலீஸ் எஸ்.ஐ., திருவாசகம், வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ரோந்து சென்றார். குடியிருப்பின் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை விசாரித்தார். போத்தனூர், மைல்கல், பாரதி நகரை சேர்ந்த ஷாருக்கான், 28, எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த யாசர் மூசாபாத், குனியமுத்தூர், காந்தி நகரை சேர்ந்த லத்தீப், 29 என தெரிந்தது.
சோதனையில் அவர்கள் ஐந்து கிலோ கஞ்சா, டெபன்டால் மாத்திரைகள், 200, மற்றும் ஊசிகள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சா, மாத்திரைகள், ஊசிகளுடன் ஒரு ஸ்கூட்டர், மூன்று மொபைல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர்.

