ADDED : ஆக 12, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
ஈச்சனாரி: ஈச்சனாரி அடுத்து பைபாஸ் சாலை சுங்கசாவடி அருகே போலீசார் கண்காணித்தனர்.
பைக்கில் வந்த ஒருவரை விசாரித்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த மவுஷம் குமார், 30, அன்னூர், கோவில்பாளையத்தில் தங்கி, வெல்டராக வேலை பார்த்து வருவது தெரிந்தது. வாகனத்தில் கஞ்சா, கஞ்சா சாக்லேட்கள் இருந்தன. பைக்குடன் அவற்றை பறிமுதல் செய்து, மவுஷம் குமாரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். கைது செய்து விசாரிக்கின்றனர்.
