/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கையில் இல்லை ரேகை ரேஷன் வாங்க முடியலை! தீர்வு காண விரைவில் வருகிறது கருவிழி பதிவு முறை

ADDED : பிப் 22, 2024 06:14 AM
கோவை: ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க, பி.ஓ.எஸ்., மெஷினில் கைரேகை பதிவு செய்வது கட்டாயமாகும். ஆனால், பலருக்கு கைரேகை பதிவு விழுவதில்லை. குறிப்பாக, கட்டட வேலை செய்பவர்கள், லேத் இயந்திரங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு கைரேகை பதிவாவதில்லை.
இப்போது மகளிர் உரிமை தொகை பெறும் பெண்கள், தங்களின் வங்கி கணக்கில் இகேஒய்சி (EKYC) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வங்கிக்கு சென்று கைரேகையை பதிவு செய்தால், பலருக்கு பதிவாவதில்லை. அங்கு ஆதார் பதிவை 'அப்டேட்' செய்ய அறிவுறுத்துகின்றனர்.
இதனால், ஆதாரில் அப்டேட் செய்ய இ-சேவை மையங்களில், கூட்டம் அதிகரித்து வருகிறது. ரேஷன் கடையில் கைரேகை பதிவு செய்ய முடியாதவர்கள், குடும்ப உறுப்பினர்கள் மூலம் பதிவு செய்து பொருட்களை பெற்று வருகின்றனர். கைரேகைக்கு பதிவு செய்ய முடியாத பலர், என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், ''ரேஷன்கடையை பொறுத்தவரை கைரேகை பதிவு அவசியம்.
கைரேகை பதிவில் பிரச்னை இருந்தால், மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
விரைவில் கருவிழி பதிவு செய்யும் முறை வர உள்ளது. 70க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த நடைமுறை உள்ளது. விரைவில் எல்லா ரேஷன் கடைகளுக்கும் வந்து விடும். அதன் பிறகு இந்த பிரச்னை இருக்காது,'' என்றார்.