/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரத்தில் கார் மோதல்; கல்லுாரி மாணவர்கள் படுகாயம்
/
மரத்தில் கார் மோதல்; கல்லுாரி மாணவர்கள் படுகாயம்
ADDED : ஜூலை 29, 2025 08:37 PM
அன்னுார்; மரத்தில் கார் மோதி, கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
கும்பகோணத்தை சேர்ந்த நிக்கல்சன் மகன் இமயவரம்பன், 19. இவருக்கு சொந்தமான காரில் இவருடன் தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த நித்தின் கரூ, 22. மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் குமார், 20. சிவகாசியை சேர்ந்த ஆகாஷ் குமார், 22. கிஷோர் குமார், 22. ஆகியோர் நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு வழியாம்பாளையத்தில் இருந்து கோவில்பாளையம் நோக்கி சென்றனர்.
குரும்பபாளையத்திற்கு முந்தைய வளைவில் கட்டுப்பாடு இழந்த கார் ரோட்டோர புளிய மரத்தில் மோதியது.இதில் காரின் முன் பகுதி நொறுங்கியது. இதில் காரை ஓட்டிச் சென்ற நித்தின் கரு, பயணித்த சந்தோஷ் குமார், ஆகாஷ் குமார், கிஷோர் குமார் ஆகிய நான்கு பேருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். லேசான காயங்களுடன் கார் உரிமையாளர் இமயவரம்பன் தப்பினார், இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.