/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சந்தை ரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு
/
சந்தை ரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு
சந்தை ரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு
சந்தை ரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு; போக்குவரத்து பாதிப்பு
ADDED : டிச 15, 2024 11:04 PM

ரோட்டோரத்தில் இடையூறு
பொள்ளாச்சி, மார்க்கெட் ரோட்டில், ரோட்டின் நடுவே வைக்கப்படும் தடுப்புகள், கடைகள் ஓரம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றனர். அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, இந்த தடுப்புகளை முறைப்படுத்த வேண்டும்.
- ராஜ், பொள்ளாச்சி.
வலுவிழந்த மரக்கிளை
பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து, போடிபாளையம் செல்லும் ரோட்டில் மரக்கிளைகள் வலுவிழந்துள்ளன. காற்றுக்கு மரக்கிளை உடைந்து விழுவதால், ரோட்டில் நடந்து செல்வோரும், வாகனங்களில் செல்வோரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். காய்ந்த மரக்கிளையை அகற்ற, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரவிக்குமார், ஜமீன் ஊத்துக்குளி.
தேங்கும் கழிவுநீர்
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாயில், அதிக அளவு கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் இதை கவனித்து தூய்மைப்படுத்த வேண்டும்.
- விஜய் செந்தில், பொள்ளாச்சி.
ரோடு சேதம்
பொள்ளாச்சி, கந்தசாமி பூங்கா செல்லும் ரோடு சேதுமடைந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்பவர்கள் பலர் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மக்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
அதிகளவு மழைநீர்
கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் ரயில்வே பாலத்தின் கீழ் அதிகளவு மழை நீர் தேங்கி நிற்பதால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பாலத்தின் கீழ் மழைநீர் தேங்குவதை வெளியேற்ற வேண்டும்.
- ஆறுச்சாமி, கிணத்துக்கடவு.
உரசும் மரக்கிளை
கிணத்துக்கடவு, அண்ணா நகரில் இருந்து கம்பன் வீதியில், மின் கம்பத்தின் மீது மரக்கிளை உரசியபடி உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. இதை மின்வாரியத்தினர் கவனித்து, மரக்கிளையை வெட்டி அகற்ற வேண்டும்.
- ராஜா, கிணத்துக்கடவு.
தேங்கும் மழைநீர்
உடுமலை, தாராபுரம் ரோட்டில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதி செய்து தர நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
பாதாள சாக்கடை மூடி சேதம்
உடுமலை, தாராபுரம் ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியின் மூடி சிதிலமடைந்துள்ளது. அவ்வழியாக கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன. சிதிலமடைந்த மூடியால் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் மூடிகளை கவனிக்கவும் முடியாமல் வாகனங்கள் அவற்றின்மீது ஏறி செல்கின்றன.
- ரஞ்சித், உடுமலை.
வாகன ஓட்டுநர்கள் சிரமம்
உடுமலை, பழனியாண்டவர் நகர் சுரங்கபாதையில் மழைநீர் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னையால் வாகன ஓட்டுநர்கள் தொலைதுாரம் சுற்றிவந்து செல்ல வேண்டி வருகிறது. சுரங்கபாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களும் தேங்கி நிற்கும் கழிவுகளால் தடுமாறி செல்கின்றனர்.
- கிருஷ்ணன், உடுமலை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
உடுமலை, சந்தைரோட்டில் சரக்கு வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. விதிமுறை பின்பற்றாமல் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அவ்வழியாக செல்லும் மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட நேரம் நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கு வருவோரும் பாதிக்கப்படுகின்றனர்.
- ராஜேஸ்வரி, உடுமலை.
சேதமடைந்த ரோடு
கணக்கம்பாளையம் ஊராட்சி பி.வி., லே - அவுட் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகனங்கள் அவ்வழியாக செல்லும்போது அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. மழைநாட்களில் ரோடு சேறும் சகதியுமாக மாறுகிறது. அப்பகுதி மக்கள் அந்த வழிதடத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர்.
- கண்ணன், கணக்கம்பாளையம்.
நோய் பரவும் அபாயம்
உடுமலை தளி ரோட்டில், பெய்த மழை நீர் செல்லாமல் தேங்கியுள்ளது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகிறது. மேலும் நோய் பரவவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்குமார், உடுமலை.