/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பம்பர் அகற்றாத கார்கள்; விதிமீறும் வாகனங்கள்
/
பம்பர் அகற்றாத கார்கள்; விதிமீறும் வாகனங்கள்
ADDED : பிப் 14, 2024 10:56 PM

கிணத்துக்கடவு,- கிணத்துக்கடவு பகுதியில் பம்பருடன் உலா வரும், நான்கு சக்கர வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கட்டுப்படுத்தாமல் உள்ளனர்.
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில், கடைகள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் ஏராளமான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 'பார்க்கிங்' செய்யப்படுகிறது.
நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் போது, வாகனம் சேதமடையாமல் இருக்க பம்பர் பொருத்தப்பட்டு வந்தது. இதனால், நான்குசக்கர வாகனங்களால் விபத்து ஏற்படும் போது, 'ஏர் பேக்' வேலை செய்யாமல் போனது. மேலும், பைக் ஓட்டுநர்கள் படுகாயம் அடைகின்றனர். இதை தொடர்ந்து வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவது தடை செய்யப்பட்டது.
ஆனால், ஒரு சில கட்சி மற்றும் அமைப்பு சார்ந்த வாகனங்களில், தற்போது வரை விதிமுறை மீறி, நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால், ரோட்டில் நடந்து செல்பவர்கள் மற்றும் பைக் ஓட்டுநர்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'பம்பர் பொருத்திய வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கும், அந்த வாகனத்தில் செல்பவர்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பம்பர் பொருத்தியுள்ள வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதித்து வாகனத்தில் உள்ள பம்பரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்,' என்றனர்.

